இலங்கை

இலங்கை முழுவதும் தொடரும் மழையுடனான வானிலை : ஒருவர் பலி, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இலங்கை முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது.

15 மாவட்டங்களில் உள்ள 103 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக DMC இன் ஊடக மற்றும் மக்கள் தொடர்பு உதவிப் பணிப்பாளர் ஜனக ஹந்துன்பதிராஜா தெரிவித்தார்.

ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு வீடுகள் முழுமையாகவும் 265 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அனர்த்தம் காரணமாக 821 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் 35 பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!