அமெரிக்காவில் வேலைகளை விட்டுவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்புங்கள் – கொலம்பிய ஜனாதிபதி அழைப்பு!
அமெரிக்காவில் சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாமல் பணிபுரியும் தனது சக நாட்டவர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு விரைவில் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும் என கொலம்பிய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
“செல்வம் உழைக்கும் மக்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது,” என்று குஸ்டாவோ பெட்ரோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“கொலம்பியாவில் சமூக செல்வத்தை கட்டியெழுப்புவோம்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது திட்டத்தை ஏற்றுக்கொண்டு, வீடு திரும்புவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் தனது திட்டத்தில் சேருபவர்களுக்கு தனது அரசாங்கம் கடன்களை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் குடியேற்றம் தொடர்பாக ஏற்பட்ட கடுமையான பகையைத் தொடர்ந்து பெட்ரோ தனது கருத்துக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)