இலங்கையில் TIN இலக்கத்தை இலகுவாகப் பதிவு செய்ய அறிமுகமான QR குறியீடு
இலங்கையில் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பதிவு செய்யும் முறையை இலகுவாக்குவதற்ககாக QRகுறியீடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஜி.எச். பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.
இந்த QRகுறியீட்டை பயன்படுத்தி ஏற்கனவே TIN இலக்கத்தை பதிவு செய்தவர்களும் தங்கள் பதிவை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
எவ்வாறு இல்லை எனில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அதை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
வரி நிர்வாகம் மற்றும் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 1 கோடிக்கும் அதிகமான TIN இலக்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
(Visited 33 times, 1 visits today)





