தனது விமான ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்த காண்டாஸ் நிறுவனம்!
அவுஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான காண்டாஸ் தனது விமான ஊழியர்களுக்கான சீருடை விதிகளை நீக்கியுள்ளது.
இதன்படி விமானச் சிப்பந்திகளான பெண்கள் குதி உயர்ந்த பாதணிகளை அணியாமல் விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண் சிப்பந்திகளும் மேக் அப் அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவீன எதிர்பார்ப்புகளை சிறப்பாக பிரதிபலிப்பதற்கும்இ பல்லினக் கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட ஊழியர்களுக்கு சீருடைகள் சௌகரியமாக இருப்பதற்காகவும் இந்த விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக காண்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண் ஊழியர்கள் கட்டாயமாக மேக் அணிய வேண்டும் என்பதுபோன்ற விதிகளை நீக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரிவந்த நிலையில் இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)





