இலங்கை

புத்தளம் – ஆண்டிமுனை கடற் பிரதேசத்தில் மீன்படி இயந்திரங்கள் தீவைத்து எரிப்பு

புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆண்டிமுனை கடற் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி இயந்திர படகுகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் என்பனவற்றுக்கு இனந்தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மீன்பிடி இயந்திர படகுகளும், ஒரு பெரிய வள்ளம் என்பன முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரண்டு வள்ளம் பகுதியளவிலும் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், நான்கு மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாகவும் உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட மீன்பிடி இயந்திரப் படகுகள் , வள்ளங்கள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களின் பெறுமதி இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று (19) அதிகாலை 1 மணிக்கும் 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த மீன்பிடி படகுகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களும் இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்