ஐரோப்பா

இந்தியா பயணிப்பதனை தவிர்த்த புட்டினின் முக்கிய திட்டம் வெளியானது!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வர இயலாது என்று பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தவர் இவ்வாறு திட்டமிட்டுள்ளார்.

சீனாவில் பெல்ட் அண்ட் ரோடு மாநாடு அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. உக்ரைன் போரைத் தொடர்ந்து புட்டினை போர்க்குற்றவாளியாக அறிவித்து அவரை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் ரஷ்யாவை விட்டு எங்கேயும் போக முடியாத நிலையில் புட்டின் உள்ளார்

முதன்முறையாக அவர் இந்தக் கட்டுப்பாட்டை கடந்து சீனாவுக்கு செல்ல உள்ளார்.சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பை புட்டின் ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் ஷி ஜின்பிங் மாஸ்கோ பயணம் மேற்கொண்டதும் இரு தலைவர்களும் தங்கள் தோழமைக்கு எந்த வித எல்லையும் இல்லை என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்