வரலாற்றில் முதல் முறையாக வடகொரியா செல்லும் புட்டின்!
வரலாற்றில முதல் முறையாக வடகொரிய தலைவர் கிம்ஜோங் உன்னை சந்திப்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பியோங்யாங் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பதாக கிம் தனது குண்டு துளைக்காத ரயில் ரஷ்யாவிற்கு சென்றிருந்தமை நினைவிருக்கலாம்.
இந்நிலையில் அந்த விஜயத்தின்போது கிம், புட்டினை தனது நாட்டிற்கு அழைத்திருந்தார். இருப்பினும் புட்டின் வடகொரிய செல்வதற்கான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் வரலாற்றில் முதல் முறையாக புட்டின் வடகொரியா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என தென்கொரியா குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் எப்போது என்ற தகவல் வெளியாகவில்லை.
கிரெம்ளினின் கூற்றுப்படி, இரு நாடுகளுக்கும் இடையே “மிக ஆழமான உறவுகளுக்கு” சாத்தியம் உள்ளது. வளர்ந்து வரும் உறவுகள் உலகின் மற்ற நாடுகளுக்கு கவலை அளிக்கக் கூடாது என்று ரஷ்யா கூறியது, ஆனால் அதைத் தடுக்க நினைப்பவர்கள் தங்கள் போக்கை மறுபரிசீலனை செய்யுமாறு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.