”புட்டின் அமெரிக்காவிற்கு மட்டுமே அஞ்சுகிறார் ” -ட்ரம்பின் சர்ச்சை கருத்து!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் “அமெரிக்காவிற்கு பயப்படுகிறார்”, ஆனால் ஐரோப்பாவிற்கு பயப்படுவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
ஐரோப்பிய தலைவர்களை எச்சரிக்கும் வகையில், நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றும் பாணியில் , ரஷ்ய ஜனாதிபதியைக் கைப்பற்ற தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், குடியேற்றக் கொள்கைகளில் ஐரோப்பா பின்தங்கியுள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
தான் மட்டும் பதவியில் இல்லையென்றால், இந்நேரம் உக்ரைன் முழுவதையும் ரஷ்யா கைப்பற்றியிருக்கும் என்று ட்ரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.





