ஐரோப்பிய நாடுகளுடன் போருக்கு தயாராகும் புட்டின்!
தேவைப்பட்டால் ஐரோப்பாவுடன் போருக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் “போரின் பக்கம்” இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
போர் நிறுத்தம் குறித்து ஐரோப்பிய நாடுகள் முன்வைக்கும் அமைதி கோரிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவை ட்ரம்பின் அமைதி முயற்சிகளைத் தடுக்கின்றன என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ட்ரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச கோரிக்கைகள் ரஷ்யாவிற்கு சார்பாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.





