உலகில் எந்த பயங்கரவாதியும் துணிந்து செய்யாததை புட்டின் செய்துள்ளார்!
உக்ரைனின் அணுசக்தி அமைப்பின் மீதான விளாடிமிர் புதினின் தாக்குதல்கள் “உலகில் எந்த பயங்கரவாதியும் இதுவரை துணிந்து செய்யாத தாக்குதல் நிலை என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ஆழ்ந்த குளிர் காலத்தில் வெப்பமூட்டும் மற்றும் மின்சார வசதிகள் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் குறித்து உலகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புடின் வேண்டுமென்றே இவ்வாறான தாக்குதல்களை முன்னெடுத்தமையால் நாட்டில் அவசரகால மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வரும் நாட்களில் வெப்பநிலையானது -25 பாகை செல்சியஸாக குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மிகப் பெரிய குளிர்காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே “உயர் மின்னழுத்த துணை மின்நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக, அணு மின் நிலையங்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று உக்ரைனின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான DTEK தெரிவித்துள்ளது.





