ரஷ்ய தாக்குதலுக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்திய புட்டின்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மொஸ்கோ அருகே உள்ள இசையரங்கில் பயங்கரவாதிகளே தாக்குதல் நடத்தியதாய் முதன்முறை ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும் தாக்குதலில் உக்ரேனுக்கும் பங்கு இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு ஒளிபரப்பான கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகளிடம் புட்டின் பேசினார்.
ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பு மொஸ்கோ தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
உக்ரேன் தாக்குதலுக்கு உத்தரவிட்டிருக்கலாம் என புட்டின் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்டின் பரவலான அச்சுறுத்தல்களுடன் அது பொருந்திப் போவதாக அவர் கூறினார்.
மொஸ்கோ தாக்குதலில் உக்ரேன் சம்பந்தப்பட்டதற்கு எந்தச் சான்றும் இல்லை என கீவ்வும், வொஷிங்டனும் வலியுறுத்தின.





