உக்ரைன் மீதான அணு ஆயுதப் போர்: மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
உக்ரைன் ரஷ்யாவிற்குள் ஆழமான இலக்குகளைத் தாக்க நீண்ட தூர மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு உக்ரைனுக்கு பச்சைக்கொடி காட்டினால் அணுசக்தி போர் ஏற்படும் என ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் மேற்கத்திய அரசாங்கங்களை எச்சரித்தார்,
“ஐரோப்பிய பாராளுமன்றம் அழைப்பது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒரு உலகப் போருக்கு வழிவகுக்கிறது” என்று வோலோடின் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ” ஏதாவது நடந்தால், ரஷ்யா மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி கடுமையான பதிலைக் கொடுக்கும். இதைப் பற்றி யாருக்கும் எந்த மாயைகளும் இருக்கக்கூடாது.” இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் செய்த மாபெரும் தியாகங்களை மேற்கு நாடுகள் மறந்துவிட்டதாக மாஸ்கோவிற்குத் தோன்றியதாக அவர் கூறினார்.
மேற்கில் சாத்தான் II என அழைக்கப்படும் ரஷ்யாவின் RS-28 Sarmat கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஐரோப்பிய பாராளுமன்றம் கூடும் ஸ்ட்ராஸ்பேர்க்கை தாக்க வெறும் 3 நிமிடம் 20 வினாடிகள் எடுக்கும் என்பதை ஐரோப்பியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.