இந்தியா செய்தி

மனைவி மற்றும் 2 மகள்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பஞ்சாப் நபர்

பஞ்சாபின்(Punjab) ஃபெரோஸ்பூர்(Ferozepur) மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஹர்மன் நகரில் உள்ள தங்கள் வீட்டில் 42 வயதான அமன்தீப் சிங்(Amandeep Singh) என்ற நபர், 40 வயது மனைவி ஜஸ்வீர்(Jasvir) மற்றும் அவர்களது இரண்டு மகள்களான 10 வயது மன்வீர் கவுர்(Manvir Kaur) மற்றும் 6 வயது பர்மீத் கவுர்(Parmeet Kaur) ஆகியோரை சுட்டுக் கொன்று பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேலும், கொலை ஆயுதமான ஒரு துப்பாக்கியை குற்றம் நடந்த இடத்திலிருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அமன்தீப் சிங் ஒரு கட்டிடக் கலைஞர் மற்றும் ஒரு சலூன் நிறுவனத்தை நடத்தி வந்ததாக அறியப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கான காரணத்தை அறிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் பூபிந்தர் சிங் சித்து(Bhupinder Singh Sidhu) குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!