மடகாஸ்காரில் (Madagascar) தீவிரமடைந்த போராட்டம் – நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி!

மடகாஸ்கரின் (Madagascar) ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் பிற அதிகாரிகளும் இன்று தெரிவித்துள்ளனர்.
அவர் பிரான்ஸின் விமானமொன்றில் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக இராணுவ வட்டாரம் ராய்ட்டர்ஸிடம் (Reuters )தெரிவித்துள்ளது.
தண்ணீர், மின் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து அந்நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு இராணுவத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான சிடெனி ராண்ட்ரியானாசோலோனியாகோ (Siteny Randrianasoloniaiko) இந்த தகவலை ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நாங்கள் ஜனாதிபதி அலுவலக ஊழியர்களை அழைத்தோம், அவர் நாட்டை விட்டு வெளியேறியதை அவர்கள் உறுதிப்படுத்தினர்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தற்போது எங்கு தலைமறைவாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.
இது தொடர்பான மேலதிக செய்தி
மடகாஸ்கர் அரசுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராணுவம்