ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் வெடிப்பு!
ஈரான்மீதான போர் நடவடிக்கை காரணமாக டொனால்ட் ட்ரம்புக்கு donald trump அமெரிக்காவில் செல்வாக்கு சரிய ஆரம்பித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
“நோ கிங்ஸ்” (No Kings) என்ற மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை பாரிய போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா முழுவதும் சுமார் 3,000 இடங்களில் நடைபெறவுள்ள இப்போராட்டங்களில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் ஈரான் மீதான போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டங்கள் இடம்பெறவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் டிசி மற்றும் சிகாகோ போன்ற முக்கிய நகரங்களில் பிரம்மாண்டமான பேரணிகள் நடத்தப்படவுள்ளன.
வெறும் ஆறு லட்சம் மக்கள் தொகை கொண்ட வெர்மான்ட் போன்ற சிறிய மாகாணங்களிலும் கூட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
முந்தைய போராட்டங்களின் சாதனைகளை முறியடித்து, அமெரிக்க வரலாற்றிலேயே இது ஒரு மிகப்பெரிய போராட்டமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.





