ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் – நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் மரணம்!
ஈரானில் இடம்பெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் போராட்டம் தொடர்பான புதிய புள்ளிவிபரங்களை பகிர்ந்துள்ளது.
அதில் 116 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2600 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹெடி ஆசாத் (Mohammad Movahedi Azad) போராட்டங்களில் பங்கேற்கும் எவரும் “கடவுளின் எதிரியாக கருதப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்தே பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





