ICE அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் முன்னெடுக்கப்படும் போராட்டம் – 28 பேர் கைது!
மினியாபோலிஸில் (Minneapolis) பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
குடியேற்ற எதிர்ப்பு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரிகளுக்கு எதிராகவே மேற்படி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
வாஷிங்டன், டி.சி., பாஸ்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் “ICE Out For Good” என்ற தொனிப்பொருளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போராட்டங்கள் அமைதியாகவே இடம்பெற்றாலும் சில இடங்களில் மாத்திரம் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக மினியாபோலிஸில் ஹோட்டல் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. இதில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





