அமெரிக்க வெள்ளை மாளிகையை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்!
காஸாவில் இஸ்ரேலின் போர் தொடங்கி சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு, பாலஸ்தீனிய சார்ப்பு எதிர்பாளர்கள் வெள்ளை மாளிகை முன் ஒன்றுக்கூடியுள்ளனர்.
30,000 பாலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் யூத இனத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.
75,000 க்கும் மேற்பட்டோர் DC இல் உள்ளனர், மேலும் வெள்ளை மாளிகை இப்போது #ThePeoplesRedLine ஆல் முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இரண்டு மைல் நீளமுள்ள இந்த பேனரில், அக்டோபர் 7 முதல் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
“உடனடியான போர்நிறுத்தம், காசா மீதான முற்றுகைக்கு உடனடி முடிவு, அனைத்து பாலஸ்தீனிய கைதிகளின் சுதந்திரம் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்ட வேண்டும்” என்று ஆர்ப்பாட்ட காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.