மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் நாளை போராட்டம்: கர்நாடக முதல்வர் அழைப்பு
மத்திய அரசை கண்டித்து தில்லி ஜந்தர் – மந்தரின் நாளை போராட்டம் நடத்தவுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்துக்கான வரிப் பகிர்வில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதற்கும், குறைவான மானியம் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டத்தை கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார்.
“மத்திய அரசின் நிதிப் பாகுபாடு, கர்நாடகாவுக்கான நியாயமான மானிய பங்கீட்டை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நாளை காலை 11 மணிக்கு ஜந்தர் – மந்தரில் போராட்டம் நடத்தப்படும். இது யாருக்கும் எதிரானதல்ல, கர்நாடகத்தின் நலனுக்கானது. கட்சி பாகுபாடின்றி அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்திகிறேன்.” என அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)