செய்தி தமிழ்நாடு

மதுரையில் பிஜேபி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் நிர்வாக குளறுபடி ஏற்பட்டதாக மதுரை மாவட்ட பிஜேபி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை சித்திரைத் திருவிழாவில் நிர்வாக குளறுபடி ஏற்பட்டதாக மதுரை மாவட்ட பிஜேபி தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பிஜேபியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் இறுதியாக உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர் அதனை தொடர்ந்து பிஜேபி மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தினர்.

அந்த மனுவில் மதுரை மாவட்டத்தில் வருடந்தோறும் சித்திரை மாதம் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை ஒட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையின்ரும் மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டுமென்று கடந்த 2022ம் ஆண்டு.

உரிய ஏற்பாடுகள் இல்லாமல் அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெற்றதால் உயிர் பலிகள் ஏற்பட்டதென்றும், இந்த ஆண்டு அதுபோல எவ்வித நிகழ்வும் நடக்காத வண்ணம் உரிய ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் செய்ய வேண்டுமென ஏற்கனவே தங்களிடம் மனு அளித்திருந்தேன்.
இந்த வருடம் 2023ம் ஆண்டு நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தில்.

கடந்த ஆண்டு போலவே முன்னெச்சரிக்கை இல்லாத செயல்பாடுகளினாலும், மாவட்ட நிர்வாகம் காவல்துறையினரின் அலட்சியத்தாலும், லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடும் இடத்தில் உரிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படாத காரணத்தினால் மூன்று உயிர்கள் பலியாகிவிட்டன.

இதனை மேற்கோள் காட்டி நாங்கள் கொடுத்த புகாரின் மீது தக்க நடவடிக்கைஎடுத்திருந்தால் பக்தர்களின் உயிர் இழப்பினை தவிர்த்திருக்கலாம்.

நாங்கள் ஏற்கனவே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், ஆற்றில் இறங்கும் வைபோகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பேரிடர் மேலாண்மை பிரிவின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், சித்திரை திருவிழா நடைபெறும் காலங்களில் மதுக்கடைகளை அடைக்க வேண்டுமென்று தங்களிடம் கோரிக்கைவிடுத்தும் அதனை செயல்படுத்தாமல் இருந்ததால் இந்த உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளது எனவே.

மாவட்ட ஆட்சியர அவர்கள் இளிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகாழவண்ணம் இருக்க உரிய பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவுகளின் மூலம் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்றும்.

சித்திரை திருவிழா காலம் முழுவதும் மதுரை மாவட்டத்தில் மதுக்கடைகளை அடைக்கக்கோரியும், மேலும் உயிர் இழந்த பக்தர்களின் குடும்பத்திற்கு உரிய அதிகபட்ச இழப்பீட்டை நிவாரணங்களாக வழங்கவேண்டுமென்றும் இதன்மூலம் கேட்டுக்கொள்கின்றேன் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

(Visited 7 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி