ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் 23 வயதான பிரபஞ்ச அழகி பரிதாப மரணம்!

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 23 வயதான பிரபஞ்ச அழகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னணி மாடலான சியன்னா வெயிர். 2022 பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்று, இதில் இறுதி சுற்று போட்டியாளராக முன்னேறியவர்.இவர் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள விண்ட்சர் போலோ மைதானத்தில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது குதிரை திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வெஸ்ட் மீட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சியன்னா தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டார்.

தொடர்ந்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படதாதால் சுமார் 1 மாதம் வென்டிலேட்டரில் இருந்தார். எனினும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று வென்டிலேட்டர் அகற்றப்பட்டதை அடுத்து மே 4 அன்று சியன்னா பரிதாபமாக உயிரிழந்தார்.

Miss Universe Finalist And Model Sienna Weir Dies At 23 In A Tragic Horse-Riding Accident

சிட்னி பல்கலைக்கழகத்தில் இலக்கியம் மற்றும் உளவியல் ஆகிய பாடங்களில் இரட்டை பட்டப்படிப்பை முடித்த சியன்னா, பிரிட்டனுக்கு சென்று குடியேறி பேஷன் தொழிலில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்.

இவருக்கு குதிரை சாவரி என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. தனது 3 வயதில் இருந்தே குதிரை சவாரியில் ஈடுபடும் இவர், இது இல்லாத வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியாது என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் கடைசியில், அதுவே சியன்னாவின் வாழ்க்கையை பறிக்கும் அவலமாக மாறிவிட்டது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content