இங்கிலாந்தில் புரோஸ்டேட் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது ; தேசிய சுகாதார சேவை தகவல்
இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளதாக தேசிய சுகாதார சேவை (NHS) தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் 64,425 ஆண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 சதவீத அதிகரிப்பாகும்.
தற்போது ஸ்காட்லாந்திலும் இது பொதுவான புற்றுநோயாக மாறியுள்ள நிலையில், வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு 12,000-க்கும் அதிகமானோர் புரோஸ்டேட் புற்றுநோயால் உயிரிழப்பதாகத் தரவுகள் எச்சரிக்கின்றன.
குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், கருப்பினத்தவர்கள் மற்றும் குடும்பப் பின்னணியில் இந்நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அபாயம் அதிகம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானவர்கள் உடனடியாக இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நான்காவது நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் சைக்கிள் ஓட்ட ஜாம்பவான் சர் கிறிஸ் ஹோய் தற்போது களம் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





