கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளருக்கு பதவி உயர்வு
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளராக செயற்பட்டு வந்த என்.எம்.நௌபீஸ் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவின் மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வழங்கி வைக்கப்பட்ட கடிதத்திற்கமைவாக, பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்காவினால் அவருக்கான கடிதம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
பிரதம செயலாளர் காரியாலயத்தில், இக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டபோது, கிழக்கு மாகாண ஆளுநரின் எல்.பி.மதநாயக கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)





