நியூசிலாந்து முழுவதும் அமலுக்கு வரும் தடை!
நியூசிலாந்து முழுவதும் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்த தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon) இதனை தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க அது உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூஸிலந்தில் சரிந்து வரும் கல்வியறிவு விகிதத்தைக் கையாள லக்சனின் அரசாங்கம் முயற்சி செய்கிறது.
ஒரு காலத்தில் உலகின் சிறந்த கல்வியறிவு கொண்ட நாடுகளில் ஒன்றாக நியூஸிலந்து திகழ்ந்தது. ஆனால் அங்கு தற்போது படிப்புத் திறனும் எழுத்துத் திறனும் பெரியளவு சரிந்துள்ளன.
அங்கு கல்வியறிவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகச் சென்ற ஆண்டு ஆய்வாளர்கள் சிலர் எச்சரித்தனர்.
15 வயதுப் பிள்ளைகளில் சுமார் மூன்றில் ஒருவரால் கிட்டத்தட்ட அறவே படிக்கவோ எழுதவோ முடியவில்லை என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.





