இலங்கையை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் : வரவு செலவு திட்டத்தில் தீர்வு!
இலங்கையின் பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பிரச்சினைகளுக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் சில தீர்வுகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் நிதி அமைச்சும், நிதி அமைச்சரும் செயற்படுவதாகவும், இவ்வாறான நிலையில் சில இன்னல்களுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது மருத்துவத் துறைக்காக அல்ல என்றும், நாட்டையே பாதித்துள்ள பொருளாதார நெருக்கடிதான் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)