பொது வெளியில் பிரியாமணியை சங்கடப்பட வைத்த தயாரிப்பாளர் போனிகபூர்
’மைதான்’ படத்திற்கான ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கில் நடிகை பிரியாமணியை சங்கடப்பட வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்துள்ள ’மைதான்’ திரைப்படம் இன்று இந்தியில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் நேற்று நடைபெற்றது. இதில் படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். படம் பார்ப்பதற்கு முன்னால், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து விட்டு நடிகர்கள் உள்ளே சென்றார்கள்.

தயாரிப்பாளர் போனிகபூரும் தனது மகள் ஜான்வி கபூர் மற்றும் மகன் அர்ஜூன் கபூர் என குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது அங்கு புடவையில் வந்திருந்த பிரியாமணியுடன் அவர் ஒன்றாக நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது அவர் பிரியாமணியை அணைத்துப் பிடித்தபடி நின்றிருந்த விதம் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் பலரும் போனி கபூரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். ’பிரியாமணி போன்ற பாப்புலர் நடிகையிடமே மீடியா முன்னிலையில் போனி கபூர் இப்படி நடந்து கொண்டால் மீடியாவுக்கு பின்னால் என்னெல்லாம் செய்வாரோ? வளர்ந்து வரும் நடிகைகளை நினைத்தால் பயமாக இருக்கிறது!’ என்றும் ‘இரண்டு பெண் குழந்தைகளின் அப்பா இப்படியா நடந்து கொள்வது?’ என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவின் சிறந்த கால்பந்தாட்ட கோச்சான எஸ்.ஏ. ரஹீமின் கதைதான் ‘மைதான்’. இவரது கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்திருக்கிறார். அவரது மனைவி சாய்ரா கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்துள்ளார்.





