பிரித்தானியாவில் சொந்த வீடுகளை வைத்திருப்போருக்கு சிக்கல் – அதிகரிக்கப்படும் வரி கட்டணங்கள்!
பிரெக்சிட்டில் இருந்து பிரித்தானியா விலகிய பிறகு நிதி பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன் £30 பில்லியன்களை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய சான்சலர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) வீடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்களை இரட்டிப்பாக்குவது தொடர்பில் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இந்த சாத்தியமான நடவடிக்கை சில வீட்டு உரிமையாளர்களுக்கு வருடாந்திர பில்கள் £10,000 பவுண்ட்ஸ் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
விமர்சகர்கள் இந்த திட்டங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர், குறிப்பாக பல குடியிருப்பாளர்கள், நிலையான வருமானத்தில் வாழும் ஓய்வூதியதாரர்கள், இதனால் பாதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை பெரும்பாலும் அதிக சொத்து மதிப்புள்ள இடங்களில் வீடுகளை வைத்திருப்பவர்களை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உதாரணமாக Band G இல் அமைந்துள்ள வீடுகளின் வருடாந்த கட்டணங்கள் தோராயமாக £3,800 இலிருந்து £7,600 பவுண்டஸ் வரை அதிகரிக்கும். அதேபோல் Band H இல் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் வருடாந்த கட்டணமாக £4,560 இல் இருந்து £9,120 பவுண்ட்ஸ் வரை செலுத்த வேண்டியேற்படும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிதி ஆய்வுகள் நிறுவனம் இந்த அணுகுமுறை ஆண்டுதோறும் £4.2 பில்லியன்களை ஈட்டக்கூடும் என்று பரிந்துரைத்துள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தால் 4.1 விகிதமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





