உண்ணாவிரத போராட்டத்தை தீவிரப்படுத்தும் பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீன(Palestine) ஆதரவு ஆர்வலர் திரவ உணவுகளையும்(liquid food) மறுக்க தொடங்க திட்டமிட்டுள்ளார்.
மேலும் இந்த கடுமையான நடவடிக்கை அரசாங்கத்தை தனது போராட்டக் கோரிக்கைகளில் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன அதிரடிப் படையுடன் தொடர்புடைய கைதியான உமர் காலித்(Omar Khalid), 13 நாட்களுக்கு முன்பு சாப்பிடுவதை நிறுத்தினார்.
தற்போது எலக்ட்ரோலைட்டுகள்(electrolytes), சர்க்கரைகள் மற்றும் உப்புகள் கொண்ட திரவங்களைப் பெற்று வருகிறார், ஆனால் சனிக்கிழமை முதல் இவற்றையும் முற்றிலுமாக நிறுத்து முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உணவு இல்லாமல் உடல் வாரக்கணக்கில் உயிர்வாழ முடியும் என்றாலும் நீரிழப்பு மிகக் குறுகிய காலத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாலஸ்தீன அதிரடிப் படையுடன் தொடர்புடைய மூன்று உண்ணாவிரதக் கைதிகள் தங்கள் போராட்டங்களை முடித்துக்கொண்டு வெற்றியைக் கூறி சில நாட்களுக்குப் பிறகு உமர் காலிதின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.





