மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்றம் – அமெரிக்க பிரஜை விடுவிப்பு!

மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்றத்தில் ஒரு ரஷ்ய-அமெரிக்க பிரஜை விடுவிக்கப்பட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் அமெச்சூர் பாலேரினா க்சேனியா கரேலினா, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் யெகாடெரின்பர்க் நகரில் கைது செய்யப்பட்ட நிலையில் ரஷ்ய சிறையில் அடைப்பட்டிருந்தார்.
உக்ரைனுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பணம் நன்கொடையாக வழங்கியதற்காக அவர் தேசத்துரோக குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு ஈடாக, 2023 ஆம் ஆண்டில் சைப்ரஸில் கைது செய்யப்பட்ட இரட்டை ஜெர்மன்-ரஷ்ய குடிமகனான ஆர்தர் பெட்ரோவை அமெரிக்கா விடுவித்ததாக கூறப்படுகிறது.
வியாழக்கிழமை அதிகாலையில் அபுதாபியில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.