ஈக்வடார் (Ecuador) சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல்! பலர் பலி!
ஈக்வடார் (Ecuador) சிறையில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சண்டையில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலையில் மச்சாலாவில் (Machala) உள்ள எல் ஓரோ எண் 1 (El Oro No 1) தடுப்பு மையத்தில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததாகவும், பலமணி நேரங்களாக நீடித்த மோதல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சில கைதிகள் தீவிர காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
மோதலின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் மூன்று வெடிக்கும் சாதனங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




