இளவரசி டயானாவின் ஸ்வெட்டர் நம்பமுடியாத விலைக்கு விற்பனை
பிரித்தானிய அரச குடும்பத்தின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ஸ்வெட்டர் ஒன்று 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இளவரசி டயானா அணிந்திருந்த ஆடை ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் ஏல முறைப்படி ஏலத்தை நடத்திய நிறுவனம், இந்த ஸ்வெட்டரை இளவரசி டயானா 19 வயதில் பயன்படுத்தியதாக அறிவித்தது.
1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற போலோ போட்டியில் அப்போதைய இளவரசர் சார்லஸுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சில நாட்களுக்குப் பிறகு அதே ஸ்வெட்டரை அவர் அணிந்ததாகவும் ஏல நிறுவனம் கூறியுள்ளது.
(Visited 6 times, 1 visits today)