ஐரோப்பா

கௌரவங்களையும்,’ Duke of York’பட்டத்தையும் துறந்த இளவரசர் ஆண்ட்ரூ(Prince Andrew)

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ (Prince Andrew), ‘யோர்க் கோமகன்’ (Duke of York) என்ற பட்டம் உட்பட தனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பட்டங்களையும், கௌரவங்களையும் இனி பயன்படுத்தப் போவதில்லை என்று நேற்று (17) அறிவித்தார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) விவகாரத்தில் தன் மீதான தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், அவரது அண்ணன் மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னர் மற்றும் தனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்ததாகவும், தனது கடமையை குடும்பத்திற்கும் நாட்டிற்கும் முதன்மைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் குற்றங்களுக்கு ஆளான வெர்ஜீனிய கியூஃப்ரே (Virginia Giuffre) என்பவரின் புதிய நினைவுக் குறிப்பு குறித்த பகுதிகள் சமீபத்தில் வெளியானது. அதில், இளவரசர் ஆண்ட்ரூ மீது அவர் முன்வைத்த பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் மீண்டும் பேசுபொருளாகின.

இந்த விவகாரம் காரணமாக, இளவரசர் ஆண்ட்ரூ ஏற்கனவே 2019 ஆம் ஆண்டிலேயே அரச கடமைகளிலிருந்து விலகியிருந்தார்.

அவர் ‘யோர்க் கோமகன்’ பட்டத்தைத் துறந்தாலும், ராணி எலிசபெத்தின் மகனாகப் பிறந்த காரணத்தால், அவர் ‘இளவரசர்’ என்ற தகுதியுடன் இருப்பார்.அவரது முன்னாள் மனைவி சாரா பெர்குசன் இனி “யோர்க் கோமாட்டி” (York Duchess) என்று அழைக்கப்படமாட்டார், ஆனால் அவர்களின் மகள்கள் பீட்ரைஸ் மற்றும் யூஜெனி ஆகியோர் இளவரசி என்ற பட்டத்தைத் தொடர்ந்து பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தான் உறுதியாக மறுப்பதாகவும் இளவரசர் ஆண்ட்ரூ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்