சுவிஸில் உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளை நடத்தும் பிரதமர் ஹரிணி!
சுவிட்சர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Harini Amarasuriya அங்கு உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபட்டுவருகின்றார்.
உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திவருகின்றார்.
அந்தவகையில் சிங்கப்பூர் Singapore ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன் Tharman Shanmugaratnam இரு தரப்பு கலந்துரையாடலில் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்குச் சிங்கப்பூர் வழங்கிய உதவிகளுக்காக பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் MF முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவையும் Kristalina Georgieva சந்தித்து, இரு தரப்பு பேச்சு நடத்தியுள்ளார்.

இக்கலந்துரையாடல்களில் தொழில் அமைச்சரும் நிதி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும் Anil Jayantha Fernando பங்கேற்றார்.
மேலும் சில சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.
சுவிஸில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள மேலும் சில நாடுகளின் தலைவர்களை அவர் இன்று சந்திக்கவுள்ளார்.
எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதியளவிலேயே பிரதமர் நாடு திரும்புவார் என அறியமுடிகின்றது.





