மலேசியா பறக்கிறார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, Narendra Modi இரு நாட்கள் அரசமுறை பயணமாக நாளை மறுதினம் (06) மலேசியா Malaysia செல்கின்றார்.
இதன்போது முக்கியத்துவமிக்க சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.
இந்தியா-மலேசியா அமைப்பின் 10-வது கூட்டத்தையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் , பிரதமர் மோடி பேச்சு நடத்துவார்.
இதன்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது
தொடர்பில் அவதான் செலுத்தப்படவுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.





