நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு!
கடுமையான வானிலை மற்றும் கனமழை அடுத்த இரண்டு நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அந்தந்த மாவட்டங்களில் ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை மதிப்பிடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உயிர்களைப் பாதுகாக்கவும் தேவையான நிவாரணங்களை வழங்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகவும் சரியான முறையிலும் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிவாரணம் வழங்க தங்கள் மாவட்டங்களுக்குச் சென்றால், பட்ஜெட் விவாதங்கள் தடைபடும் என்பதால், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விஷயம் குறித்து மேலும் விவாதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.





