ஜனாதிபதி தேர்தல்!! தம்மிக்க பெரேராவுக்கு மகிந்த கட்சி முன்வைத்துள்ள நிபந்தனைகள்
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்சி பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி, ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் அதற்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறுகிறார்.
10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, பொது நிறுவனங்களை தனியார் மயமாக்க வேண்டாம், வரி குறைப்பு போன்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியே அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)