இலங்கை அரச ஊடகங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு!
 
																																		2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அரச தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தமது கொள்கை அறிக்கைகளை வெளியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி முதல் அரச தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது கொள்கை அறிக்கைகளை வெளியிட முடியும் என லங்காதீப நாளிதழ் தெரிவித்துள்ளது .
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) தேசிய தேர்தல் ஆணையத்தில் ஒளிபரப்பு நேரத்திற்கான இடங்கள் வரையப்பட்டன.
அறிக்கையின்படி, ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் அவர்களின் கொள்கை அறிக்கைகளை வெளியிட 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுளள்து.
(Visited 6 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
