இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் இந்தியா வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அரச தலைவரை இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று (ஜூலை 20) உத்தியோகபூர்வ இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு புறப்பட்டார்.
2022ல் பதவியேற்ற பிறகு அண்டை நாட்டிற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
(Visited 10 times, 1 visits today)