வட அமெரிக்கா

ஹவாய் தீவுக்கு செல்லும் அமெரிக்க அதிபர்?

கட்டுப்படுத்த முடியாத காட்டு தீயால் அமெரிக்கா அருகேயுள்ள ஹவாய் தீவு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் ஹவாய் தீவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் ஹவாய் செல்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள தீவுக்கூட்டங்களில் 2-வது மிகப்பெரிய தீவு மவுய். இந்த தீவில் கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுத்தீ ஏற்பட்டது.

காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், காற்று வேகமாக வீசியதால் காட்டுத்தீ கட்டுக்குள் வராமல் நகரக்குள் பரவியது. இதனால் 90-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

இந்த காட்டுத்தீயால் மவுய் தீவு கடும் சேதம் அடைந்துள்ளது. ஒரு நகரமே தீக்கிரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்