அநுரவின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை – அரசாங்கத்தில் புதிய பதவிகள்

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர்களாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் பெர்னாண்டோ ஆகியோரே நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.
2024 செப்டெம்பர் 24 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் அமைச்சரவையின் ஒருமித்த கருத்துடன் வழங்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சம்பளம் அல்லது பிற சலுகைகள் இல்லாமல் நன் மதிப்பின் பேரில் இந்த இரண்டு நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
(Visited 132 times, 1 visits today)