கூட்ட நெரிசலில் சிக்கி கொண்ட சிறுமி: இலங்கை ஜனாதிபதி செய்த நெகிழ்ச்சியான செயல்! குவியும் பாராட்டு

சம்மாந்துறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுமியை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க துரிதமாக மீட்டெடுத்தார்.
பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் செல்பி எடுப்பதற்காக ஜனாதிபதிக்கு அருகில் சென்றபோது, சிறிது நேரம் பீதி ஏற்பட்டது. கூட்டத்தில் குழந்தை சிரமப்படுவதைக் கவனித்த ஜனாதிபதி, தனிப்பட்ட முறையில் தலையிட்டு அவளை பாதுகாப்பாக தூக்கிச் சென்றார்
(Visited 1 times, 1 visits today)