பிரித்தானியாவில் விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் – 13 வயது சிறுவன் கைது!
பிரித்தானியாவில் மின்சார ஸ்கூட்டரால் கர்ப்பிணி பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகிய சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 26 அன்று பூலில் (Poole) உள்ள ஹெர்பர்ட் அவென்யூவில் (Herbert Avenue) வீதியில் நடந்து சென்ற பெண் மின்சார ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளாகினார்.
குறித்த பெண்ணுக்கு பெரிய அளவிலான காயங்கள் எதுவும் இல்லை என்றாலும், அவரின் குழந்தை ஆபத்தான முறையில் மருத்துவமனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 13 வயதான சிறுவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





