மியன்மாரில் அவசரகால நிலைமை பிரகடனம்

மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தை அடுத்து அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிச்டர் அளவில் 7.7 நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
மியன்மார் தாய்லாந்து நாடுகளின் எல்லைப் பகுதியில் காலை 11.50 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேலும் சில நில அதிர்வுகள் அங்கு உணரப்பட்டுள்ள நிலையில் வீடுகள்,கட்டிடங்கள்,பாலங்கள் என்பன பலவும் தரைமட்டமாகியுள்ளதுடன் பாரிய உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்ப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)