ஆப்கானிஸ்தானை மீண்டும் உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் பலி – 150 பேர் காயம்
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீப்பில் (Mazar-i-Sharif) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 150 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ப்ளூ மசூதிக்கு (Blue Mosque) கடுமையான சேதம் ஏற்பட்டது.
இந்த இடம் இஸ்லாத்தின் நான்காவது கலீபாவும், நபிகள் நாயகத்தின் மருமகனுமான ஹஸ்ரத் அலியின் அடக்கம் செய்யப்பட்ட இடம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஆகஸ்ட் மாத இறுதியில், ஆப்கானிஸ்தானின் மலைப்பாங்கான கிழக்குப் பகுதியில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.





