பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

பப்புவா நியூ கினியாவில் இன்று ஒரு வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி எச்சரிக்கையை வெளியிடவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 8 times, 1 visits today)