ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 09 பேர் படுகாயம்!
தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய ஒரு வலுவான நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் காயங்களுக்கு உள்ளாகினர்.
நீர் குழாய்கள் வெடிப்பு மற்றும் சிறிய நிலச்சரிவுகள் போன்ற சேதங்களை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் தீவான ஷிகோகுவின் மேற்கு கடற்கரை பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது.
இந்த நிலநடுக்கம் கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்றும் ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த அனர்த்தத்தால் 09 பேர் காயமடைந்ததாக தீ மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவித்துள்ளது.
(Visited 9 times, 1 visits today)