துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
கிழக்கு துருக்கியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நில அதிர்வு 6.0 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சிரியாவின் ஹசாகா, டெய்ர் அல்-ஜோர் மற்றும் அலெப்போ மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி பூமிக்கு அடியில் 9 கிமீ (5.6 மைல்) ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.





