கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/grf-1024x486-1.png)
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திககள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 209 கி.மீ தொலைவில் கரீபியன் கடலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட கரீபியன் கடலை அண்மித்த தீவுகள் மற்றும் நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 8 times, 8 visits today)