முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

மொரோக்கோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 296 பேர் உயிரிழப்பு

மொராக்கோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 296 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நில நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் மீட்புப்பணி விரைவாக நடந்து வருகிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் அடைந்ததுடன், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கமானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான வரலாற்றுச் சிறப்புமிக்க மராகேச்சிலிருந்து தென்மேற்கே 44 மைல் (72 கிலோமீட்டர்) தூரத்தில் மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!