கலிபோர்னியாவை தாக்கிய சக்திவாய்ந்த பனிப்புயல் – 10 பேர் மாயம் : மீட்பு பணிகளில் சிக்கல்!
வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பனிப்புயலில் சிக்கி 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நெவாடா கவுண்டி ஷெரிப் ( Nevada County Sheriff’) அலுவலகத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் மாயமானவர்களை கண்டுப்பிடிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில், சக்திவாய்ந்த குளிர்காலப் புயல் வீசுவதாகவும், இடியுடன் கூடிய மழை மீட்பு நடவடிக்கைகளை தொய்வடைய செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சீரற்ற வானிலை காரணமாக அப்பகுதியில் இருந்த விடுதிகள் ஏற்கனவே மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.





